பசுமை சாலை கொண்டு வரப்படுவதன் காரணம் என்ன?

15 ஆண்டு தேவையை பூர்த்தி செய்யும் சென்னை - சேலம் பசுமை சாலை...
பசுமை சாலை கொண்டு வரப்படுவதன் காரணம் என்ன?
x
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்ல, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். இதில்  சேலம் செல்ல 360  கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். 

 
இந்த வழியாக 20 ஆயிரம் கனரக வாகனங்கள் மற்றும் 15 ஆயிரம் பிற வாகனங்கள் பயணிக்கின்றன.இது இந்த சாலையின் மொத்த கொள்ளளவை விட 130 சதவீதம் அதிகம்.

இந்த வழியில் பயணிக்கும் வாகனங்களில் 30 சதவீதம் மேற்கு மாவட்டங்களுக்கு செல்கின்றன

இதேபோல், சென்னை மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம் செல்ல 350 கிலோமீட்டர் செல்ல பயணிக்க வேண்டும். இந்த சாலையிலும் தற்போது 20 ஆயிரம் கனரக வாகனங்கள் மற்றும் 15 ஆயிரம் பிற வாகனங்கள் பயணிக்கின்றன.இது இந்த சாலையின் கொள்ளளவை விட 160 சதவீதம் அதிகம்.இந்த வழியில் பயணிக்கும் வாகனங்களில் 40 சதவீதம் மேற்கு மாவட்டங்களுக்கு செல்கின்றன. 

சாலையின் கொள்ளளவை விட அதிக வாகனங்கள் பயணிப்பதால் சாலை விபத்துகள் நடக்கின்றன. இன்னும் 15 ஆண்டுகளில் வாகன பயன்பாடு  மேலும் அதிகரிக்கும். இதற்கு, இந்த 2 நெடுஞ்சாலைகளையும் விரிவு படுத்த, 40 ஆயிரம் கட்டிடங்கள் வரை இடிக்கப்பட வேண்டும். 2 ஆயிரத்து 200 ஹெக்டேர் நிலம் தேவைப்படும். அப்படி, விரிவு படுத்தினாலும் தேவை பூர்த்தி ஆகாது.

பசுமை வழி சாலையில் மொத்த நீளம் 277.30 கிலோமீட்டர். இதில் 9.95 கிலோமீட்டர் மட்டுமே வனப்பகுதிக்குள் செல்கிறது. சென்னை முதல் சேலம் வரை செல்ல 60 கிலோ மீட்டர் தூரம் குறைகிறது. சரணாலயம், தேசிய பூங்கா, பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தள்ளியே பசுமை வழி சாலை வரும். 

தேவைப்படும் ஆயிரத்து 900 ஹெக்டேர் நிலத்தில், 350 முதல் 400 ஹெக்டேர் அரசின் நிலம். விரைவு சாலை என்பதால் 15 வருடத்திற்கான தேவையை பூர்த்தி செய்யும்.














Next Story

மேலும் செய்திகள்