கோமாளி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்...

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி பட டிரெய்லரில் நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சி இடம்பெற்றிருந்தது.
கோமாளி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்...
x
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி பட டிரெய்லரில் நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சி இடம்பெற்றிருந்தது. இது ரஜினி ரசிகர்களிடையே மன வருத்த த்தை ஏற்படுத்தியதோடு, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில், சம்பந்தப்பட்ட காட்சி படத்தில் இருந்து நீக்கப்படும் என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் கோமாளி படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு ரஜினி வாழ்த்து தெரிவித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள  தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்  , சர்ச்சைக்குறிய அந்த காட்சி நீக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்  ., நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பும்  ரசிகர்களில் தானும் ஒருவன்  என்று ஐசரி கணேஷ்   கூறியுள்ளார் . 
 

Next Story

மேலும் செய்திகள்