இஸ்ரேல் - சிரியாவுக்கு இடையே அமெரிக்கா மத்தியஸ்தம்
இஸ்ரேல் மற்றும் சிரியாவுக்கு இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில் , பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் அமெரிக்கா தலைமையில் சிரியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் குன்றுகளில் வாழும் சிறுபான்மையினருன ட்ரூஸ் மக்களின் பாதுகாவலராக தன்னைத்தானே நிலைநிறுத்திக்கொள்ளும் இஸ்ரேல், கடந்த ஆண்டு கூட சிரியா அரசு மற்றும் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நடத்தி இருந்தது. இந்த நிலையில், இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாரிஸில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் பல தீர்வுகளை எட்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.