மெக்சிகோ, கொலம்பியாவில் இருந்தே அதிகளவு போதைப்பொருள் கடத்தல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியதைப் போல் அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்கள் வெனிசுலாவில் இருந்துதான் கடத்தப்படுகிறதா?... ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?... விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
ஜனவரி 3 அதிகாலை குண்டு சத்தங்கள்தான் வெனிசுலாவை விழித்தெழச் செய்தன...
அமெரிக்க சிறப்புப் படைகள் வெனிசுலாவின் அதிபர் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்தன...மதுரோ இப்போது அமெரிக்க சிறையில்...
நிக்கோலஸ் மதுரோ ஒரு போதைப்பொருள் கும்பல் தலைவர் என்றும், அவர்தான் அமெரிக்காவுக்குள் போதைப்பொருள்கள் கடத்தப்பட காரணம் எனவும்
டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்...
அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது உண்மைதான்...
ஆனால், தரவுகளின்படி வெனிசுலாவில் இருந்து போதைப்பொருட்கள் அமெரிக்காவிற்குள் அதிகம் வரவில்லை...பிறகு எங்கிருந்து வருகின்றன?...மெக்சிகோ...
மெக்சிகோதான்... ஃபெண்டானில், மெத், ஹெராயினுக்கான மூல ஆதாரமாக விளங்குகிறது...
அடுத்து கொலம்பியா...இதுதான் உலகின் மிகப்பெரிய கொகெயின் உற்பத்தியாளர்...
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான கொகெயின் கொலம்பியாவில் இருந்துதான் வருகிறதாம்..
அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்கள் பொதுவாக அமெரிக்கா-மெக்சிகோ இடையிலான எல்லை வழியாகத்தான் உள்நுழைகின்றன...
கார்கள், லாரிகள், சுரங்கப்பாதைகள் மூலமாகவும்... பசிபிக் மற்றும் கரீபியன் கடல் வழியாகவும் இந்த போதைப்பொருட்கள் அமெரிக்காவை வந்தடைகின்றன...
சரி...இதில் வெனிசுலாவின் உண்மையான பங்கு என்ன?..
வெனிசுலா கடத்தல் பாதையாக உள்ளது.. ஐரோப்பாவிற்குள் கடத்தப்படும் போதைப்பொருட்கள் வெனிசுலா வழியாகத்தான் செல்கின்றனவாம்... ஐரோப்பாவிற்குள் தான்...அமெரிக்காவுக்குள் அல்ல...
அத்துடன் வெனிசுலா முக்கியமான போதைப்பொருள் உற்பத்தியாளர் கிடையாது... சிந்தெட்டிக் போதைப்பொருட்களை தயாரிக்கத் தேவையான ஆய்வகங்களும் ரசாயனங்களும் அங்கு இல்லை எனவும் கூறப்படுகிறது...
பிறகு ஏன் டிரம்ப் வெனிசுலாவை குறிவைக்கிறார் என்ற கேள்வி எழும்...
ஏனெனில் டிரம்ப்புக்கு பிரச்சினை போதைப்பொருள் கிடையாது...
எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசுலாவின் அதிபராக இருந்த மதுரோ அமெரிக்காவுடன் ஒத்துப்போக மறுத்ததுதான் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது...
அமெரிக்காவை விட்டு விட்டு சீனா, ரஷ்யாவுடன் மதுரோ கைகோர்த்தது டிரம்ப்பை ஆத்திரமூட்டியுள்ளது...
எத்தனை எத்தனையோ தடைகளை விதித்தும்..அழுத்தம் கொடுத்தும் பார்த்தார் டிரம்ப்...ஆனால் எதுவுமே மதுரோவை பதவியில் இருந்து விலக்கும் அளவு சக்தி வாய்ந்தவையாக இல்லை...
அதனால்தான் போதைப்பொருள் விவகாரத்தை தனது ஆயுதமாக டிரம்ப் கையில் எடுத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்...
