US vs Russia | நடுக்கடலில் ரஷ்யாவை சீண்டிய அமெரிக்கா - ஆதரவாக குதித்த பிரிட்டன்.. தொற்றிய பதற்றம்
ரஷ்யக் கொடி கட்டிய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பிரிட்டன் ஆதரவு அளித்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி தெரிவித்தார். பெல்லா-1 என அழைக்கப்பட்டு தற்போது மரினேரா என பெயர் மாற்றப்பட்ட அந்த கப்பல், ரஷ்ய-ஈரானிய தடைகளை மீறும் வலையமைப்புகளுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவு சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டது என பிரிட்டன் அரசு விளக்கம் அளித்துள்ளது.