ஐஸ்லாந்து அருகே, ரஷ்யக் கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலில் அமெரிக்க கடற்படை ஏறிய சம்பவம் குறித்து ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது. வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறுவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ரஷ்யக் கப்பலில் இருந்த ஊழியர்களை விரைவில் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், அமெரிக்காவை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.