அமெரிக்காவிற்கு அணு ஆயுத எச்சரிக்கை விடுக்கும் ரஷ்ய எம்பி
ரஷ்ய எண்ணெய் டாங்கரை அமெரிக்கா கைப்பற்றிய நிலையில், அமெரிக்காவிற்கு ராணுவ ரீதியாக பதிலளிக்க வேண்டும் என ரஷ்ய எம்.பி கூறியிருக்கும் கருத்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தேசிய நலன்கள் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் அணு ஆயுதங்களையும் பயன்படுத்தலாம் என்றும், அமெரிக்க கப்பல்களை மூழ்கடிப்பது மட்டுமே அமெரிக்காவை தடுக்கும் என்றும் தனது telegram பக்கத்தில் ரஷ்ய எம்பி ஜுராவ்லேவ் கூறியிருக்கிறார்.