Israel | United Nations | "இஸ்ரேலின் இனவெறி நடவடிக்கைகள்.." - கடுமையாக கண்டித்த ஐநா

Update: 2026-01-09 06:58 GMT

சர்வதேச சட்டத்தை மீறியதாக இஸ்ரேலுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது...

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் இனவெறி நடவடிக்கைகளை ஐநா கடுமையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐநா, இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறியதற்காக கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குக் கரையில் இனவெறி போன்ற கொள்கைகளை இஸ்ரேல் செயல்படுத்துகிறது என்று ஐநா குற்றம் சாட்டியுள்ளது..அத்துடன் கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களின் அன்றாட வாழ்க்கையில் இஸ்ரேலின் சட்டங்கள், கொள்கைகள் மக்களை விழி பிதுங்க வைப்பதாக விமர்சித்துள்ள ஐ.நா

மேற்குக் கரையில் வசிக்கும் இஸ்ரேலிய குடியேறிகளுக்கு ஒரு சட்டம், அங்குள்ள பாலஸ்தீனியர்களுக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளதாக சாடியுள்ளது.  குடிநீர், பள்ளிகள், மருத்துவமனைகள், ஆலிவ் அறுவடை என மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் பாகுபாடான சட்டங்களால் மூச்சு முட்ட வைக்கப்படுவதாகவும்,

இனப் பிரிவினை மற்றும் நிறவெறியைத் தடைசெய்து ஒழிக்க வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறுவதாகவும் ஐநா கடுமையாக விமர்சித்துள்ளது.

மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் அனைத்து குடியேறிகளையும் வெளியேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்