Russia | Trump | Putin | வெகுண்டெழுந்த ரஷ்யா.. அமெரிக்காவுக்கு நேரடி வார்னிங்
வட அட்லாண்டிக் பெருங்கடலில் ரஷ்ய கொடிகட்டிய எண்ணெய் டேங்கர் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் எண்ணெய் ஏற்ற சென்றதாக கூறப்படும் ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட இந்த கப்பல் வட அட்லாண்டிக்கில் அமெரிக்காவின் தடைகளை மீறியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில், மற்றொரு நாட்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சர்வதேச கடற்பரப்பில் இயங்கும் கப்பல்களுக்கு எதிராக எந்தவொரு நாட்டிற்கும் பலத்தைப் பயன்படுத்த உரிமை இல்லை என்று ரஷ்யா கண்டித்துள்ளது.