நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்-அலறல் சத்தம்.. உள்ளே இருந்த பயணிகள் நிலை?

Update: 2025-07-20 06:54 GMT

அமெரிக்காவில் போயிங் ரக விமான எஞ்சினில் நடுவானில் தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து அட்லாண்டாவுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767 விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே நடுவானில் விமானத்தின் இடதுபக்க எஞ்சின் பகுதியில் தீப்பிடித்தது. இதையடுத்து, அந்த விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உரிய நேரத்தில் தீ விபத்து கண்டறியப்பட்டு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்