Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.01.2026) | 1PM Headlines | ThanthiTV

Update: 2026-01-09 07:58 GMT
  • ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பும் முடிவு ஏற்கத்தக்கதல்ல எனக்கூறி அந்த உத்தரவை ரத்து செய்தும் நீதிபதி பி.டீ. ஆஷா தீர்ப்பளித்துள்ளார்...
  • ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் மேல் முறையீடு...மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது...
  • சென்சார் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டதை தொடர்ந்து ஜனநாயகன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது...ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது...
  • வரும் சட்டமன்ற தேர்தலில் ராமதாஸ் தரப்பில் அவரது மகளும், பாமக செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி போட்டியிடுகிறார்...முதலாவதாக விருப்ப மனுவை பெற்றுக்கொண்ட ஸ்ரீகாந்தி, கையோடு மனுவை பூர்த்தி செய்து ராமதாஸிடம் வழங்கினார்
  • திமுக-வின் ஆட்சி நன்றாகவே இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்....விசிக இடம்பெறும் கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் அவர் பதிலளித்துள்ளார்....
  • சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது...ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் தொடரும் நிலையில் பராசக்தி படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது...ஒரு கிராம் ஆபரண தங்கம்12 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
  • வெள்ளி விலை கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது...ஒரு கிராம் வெள்ளி 268 ரூபாய்க்கு விற்பனையாகிறது...
  • தொகுதி உடன்பாடு தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்...தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதிமுக பாஜக இடையே வரும் 20ஆம் தேதி தொகுதி பங்கீடு கையெழுத்து என தகவல் வெளியாகி உள்ளது...
  • கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று தேமுதிக உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது...2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் இன்று அறிவிக்கிறார்...
  • வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு கரையை கடக்கிறது..இலங்கை ஹம்பாந்தோட்டை அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..
Tags:    

மேலும் செய்திகள்