Perambalur | Quarry | கல்குவாரியில் நேர்ந்த கோர விபத்து - பாறை சரிந்து தொழிலாளி பலி

Update: 2026-01-11 11:04 GMT

பெரம்பலூர் அருகே தனியார் கல்குவாரியில் பாறை சரிந்த விபத்தில் கூலி தொழிலாளி சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டார் மங்களம் கிராமத்தில் இயங்கும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் சக்கரவர்த்தி என்பவர் நேற்று மாலை பாறைகளுக்கு வெடி வைத்துவிட்டு பின்பு அங்குள்ள ஜெலட்டின் குச்சி வயர்களை எடுக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சரிவு ஏற்பட்டு பாறைக்கு அடியில் அவர் சிக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் தீயணைப்பு துறை வீரர்கள் சக்கரவர்த்தியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்