Hosur Fake Police | `நடிப்பு பத்தல..' - போலீஸ் வேஷம் போட்டு பச்சையாக மாட்டிக்கொண்ட கும்பல்

Update: 2026-01-11 10:47 GMT

ஒசூர் அருகே காவல்துறை அதிகாரி என கூறி ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். காமன்தொட்டி கிராமத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரவீன்குமார் என்பவர் அவரது அலுவலகத்தில் இருந்த போது, போலீஸ் என ஒட்டிய காரில் வந்த 4 பேர், பண மோசடி வழக்கில் கைது செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.. 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் வழக்கில் இருந்து தப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளனர். பணத்தை எடுத்து வருவதாக கூறி நைசாக பேசிய பிரவீன் குமார், காரை விட்டு இறங்கி தப்பி ஒடி வந்தார். இது குறித்து அளித்த புகாரின் பேரில் ஓசூரில் பல்வேறு கடத்தல் வழக்கில் தொடர்புடைய மல்லேஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்