Thiruttani | ஐந்தாம் படை வீட்டில் கோலாகலம்.. முருகனாய் மாறிய குழந்தைகள்

Update: 2025-10-26 08:19 GMT

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த புதன்கிழமை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காவடி மண்டபத்தில் உள்ள சண்முகருக்கு காலை தொடங்கி இரவு வரை லட்சாச்சனை பூஜை பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும். இதில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானுக்கு மாலை அணிவித்தும் குழந்தைகள் முருகன் வேடமிட்டு பக்தி பரவசத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் முக்கிய விழாவான நாளை மாலை அனைத்து முருகன் கோவில்களும் சூரசம்காரம் நடைபெறும் ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் முருகப்பெருமானுக்கு வண்ண வண்ண மலர்களால் டன் கணக்கில் புஷ்பாஞ்சலி கோலாகலமாக நடைபெற உள்ளது. மறுநாள் காலை 10 மணிக்கு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்