Thiruttani | திருத்தணி கோயிலில் கருவறைக்கு அருகே நடந்த பரபரப்பு சம்பவம்
திருத்தணி கோயிலில் கருவறைக்கு அருகே நடந்த பரபரப்பு சம்பவம்
திருத்தணி முருகன் கோயிலில் 2வது முறையாக சாமி தரிசனம் செய்ய முயன்ற பக்தர்கள் இருவர் , அதனை தடுத்த ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சென்னை வட பழனியைச் சேர்ந்த இளங்கோ அவரது தம்பி ஸ்ரீராம் ஆகிய இருவரும் பொது வழியில் மூலவரை தரிசனம் செய்த நிலையில், மீண்டும் பின்னோக்கி சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதற்கு அங்கு பணியில் இருந்த கோயில் ஊழியர்கள் பாலாஜி, ரமேஷ் ஆகியோர் மறுக்கவே அவர்களுக்கு இடையே
வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் இருவரும் 2 ஊழியர்கள் மற்றும் அர்ச்சகரை போலீசார் கண்முன்னே தாக்கியுள்ளனர்.