வீட்டை விட்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கோரம்.. உடன் இருந்த குழந்தை மாயம்

Update: 2025-12-09 09:12 GMT

கோவை மாவட்ட‌ம் சூலூர் அருகே கணவனுடன் சண்டையிட்டுச் சென்ற பெண், பிஏபி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போக்கம்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கும், அவரது கணவர் செந்தில்குமாருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவருடன் சண்டை காரணமாக, கனிஷ்கா ஸ்ரீ என்ற 3 வயது குழந்தையுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார். அதன்பின்னர், பிஏபி வாய்க்காலில் மகேஸ்வரி சடலமாக மீட்கப்பட்டார். அவருடன் சென்ற குழந்தையின் நிலை தெரியாத‌தால் தேடி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்