மதுரை மாவட்டம் போடி நாயக்கன்பட்டி கிராமத்தில் 15 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட 'மாயா' என்ற ஜல்லிக்கட்டு காளை, உடல்நல குறைவால் உயிரிழந்தது. இதையடுத்து, காளையை மாலைகளால் அலங்காரம் செய்து, இசை வாத்தியங்கள் முழங்க, அப்பகுதி மக்கள் ஊர்வலம் சென்று அய்யனார் கோவில் அருகே அடக்கம் செய்தனர்.