ஐ.நா.வில் ஒலித்த தமிழ் குரல்... அனைவரையும் உற்று நோக்க வைத்த வள்ளலார் வாக்கியம்
ஐ.நா.வில் ஒலித்த தமிழ் குரல்... அனைவரையும் உற்று நோக்க வைத்த வள்ளலார் வாக்கியம்
போர்களால் காயங்களும், வேதனைகளுமே மிஞ்சியதாகவும், சமூக நல்லிணக்கத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என்றும் ஐ.நா.வில் பேசிய சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தினார்.
இதற்கு உதாரணமாக பாண்டிய, பல்லவப் பேரரசு முதல் இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே நடைபெற்ற போர்களை அவர் சுட்டிக்காட்டினார். சமத்துவத்தைதான் அனைத்து கடவுள்களும் போதிப்பதாக கூறிய ஜோஸ் சார்லஸ் மார்டின், இறுதியில், உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்க நாம் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருப்போம் என்று குறிப்பிட்டு, வள்ளலார் வாக்கியத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.