திருப்பூரில் தங்களை டான் போல சித்தரித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்ட பள்ளி மாணவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மார்க்கெட் சாலையில் உள்ள கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள், தங்களை டான் போல சித்தரித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சீருடையில் எடுத்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.