கத்தி முனையில் பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி... தோழியே செய்த பகீர் காரியம்
தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த நந்தினி மற்றும் லாவண்யா ஆகிய இருவருடன் அனிதா என்பவர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தங்கி இருந்த அறையின் கதவை தட்டிய மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து நகையை பறித்து சென்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணையில் கள்ளக்காதலன் சாந்தகுமாருடன் சேர்ந்து நந்தினியும், லாவண்யாவும் திட்டம் தீட்டி நகையை பறிப்பதற்காக அனிதாவை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர்களிடமிருந்து எட்டரை சவரன் தங்க நகையை மீட்டனர்.