டியூசன் சென்ற 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை... நடந்ததை சொன்னதும் அதிர்ந்த பெற்றோர்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநறையூர் பகுதியை சேர்ந்த கணேஷ் ரத்தினம் மகன் ரமேஷ் வயது 56 இவர் திருவாரூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளி முடித்து மாலை நேரங்களில் ஏழை மாணவர்களுக்கு திருநறையூரில் டியூஷன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார் என மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவிக்க மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ரமேசை அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் தொந்தரவு வழக்குகள் தொடர்ந்து அதிக அளவில் வருவது பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.