பஸ்டாண்டில் சட்டையை கிழித்துக்கொண்டு சண்டை போட்ட பள்ளி மாணவர்கள் - அதிர்ச்சி வீடியோ
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். பேருந்து நிலைய கடையில் இருந்த பாத்திரங்களை எடுத்து வீசியும், சட்டைகளை கிழித்துக் கொண்டும் சண்டையிட்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் மாணவர்களை பிடிக்க முற்பட்டபோது, அனைவரும் சிதறி ஓடினர். மாணவர்கள் இடையேயான மோதல் அடிக்கடி நடைபெறுவதால், காவல்துறையினர் பள்ளிகளுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.