Salem | Manju Virattu | மாடு முட்டி நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு
மஞ்சு விரட்டில் சோகம் - மாடு முட்டி 3 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியின்போது மாடு முட்டியதில் இளைஞர், பெண் மற்றும் முதியவர் உயிரிழந்தனர். செந்தாரப்பட்டியில் மஞ்சு விரட்டு நடைபெற்றபோது மாடு முட்டியதில் சக்திவேல் என்ற இளைஞரும், கொண்டைப்பள்ளியில் மஞ்சு விரட்டு போட்டியின்போது மாடு முட்டியதில் வினிதா என்பவரும் உயிரிழந்தனர். இதேபோல், கீரிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியை வேடிக்கை பார்க்க சென்ற பெரியசாமி என்ற முதியவர் மாடுமுட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.