Mumbai Corporation | தகர்ந்த கோட்டை.. மும்பையில் வரலாற்று மாற்றம் - `ஃபைவ் ஸ்டார்’ ஆட்டம் ஆரம்பம்
மும்பையில் மீண்டும் தலையெடுக்கும் நட்சத்திர ஹோட்டல் அரசியல்
மும்பை மாநகராட்சித் தேர்தலில் பாஜக, ஷிண்டே பிரிவு சிவசேனா கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து அங்கு மீண்டும் நட்சத்திர ஹோட்டல் அரசியல் தலைதூக்கியிருக்கிறது.
பால் தாக்கரேயால் தொடங்கப்பட்ட சிவசேனாவின் கோட்டையாக இருந்த மும்பையை, பாஜக, ஷிண்டே பிரிவு சிவசேனா கட்சி கைப்பற்றியுள்ளது. குறிப்பாக ஷிண்டே பிரிவு சிவசேனா கட்சி 29 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், தனது அணியைச் சேர்ந்த கவுன்சிலர்களை யாரும் பேரம் பேசிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் அனைவரையும் பாந்திராவில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கவைத்திருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே.. ஏற்கெனவே ஏக்நாத் ஷிண்டே சில ஆண்டுகளுக்கு முன் இதே பாணியில் தனது ஆதரவு எம்எல்ஏக்களை நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்று, உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்தது மட்டுமன்றி, பாஜக ஆதரவில் முதலமைச்சரானது குறிப்பிடத்தக்கது.