கல்வராயன் மலை நீர்வீழ்ச்சியில் குளித்த மாணவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள கவியம் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற பொறியியல் மாணவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், கன்னிமா நகரை சேர்ந்த பிரேம் குமார், தனது உறவினர்களுடன் நீர்வீழ்ச்சிக்கு வந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், பிரேம்குமாரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.