Rambha Viral Post | சோசியல் மீடியா ஃபுல்லா இவங்க தான்.. தீயாய் பரவிய போஸ்ட்
மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரம்பா
நடிகை ரம்பா சமீபத்துல தன் மகளோட பிறந்த நாள கொண்டாடுனாங்க...அந்த காட்சிகள் இன்ஸ்டாவ கலக்கிட்டு இருக்கு..90ஸ் கிட்ஸ்களின் ஆதர்ஸ நாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா, தனது மகளின் 13வது பிறந்தநாளை கொண்டாடினார்.நடிகர் விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய் மற்றும் மின்சாரக் கண்ணா உள்ளிட்ட வெற்றிப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இவர், திருமணத்திற்கு பின்பு நடிப்பதை விட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை ரம்பா, தனது மூத்த மகளின் 13வது பிறந்தநாளை கேக் வெட்டி கோலாகலமாக குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் ஷேர் செய்ய, ரசிகர்கள் ரம்பா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்...