Chennai | Traffic | PongalHoliday |சென்னைக்கு ரிட்டர்ன்.. விழுப்புரத்தை கடந்து வந்த 60,300 வாகனங்கள்
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை நோக்கி வாகனங்கள் படையெடுத்து வருகின்றன. விழுப்புரத்தை கடந்து இதுவரை 60 ஆயிரத்து 300 வாகனங்கள் சென்னை நோக்கி வந்துள்ளன. விழுப்புரம் பொங்கல் பண்டிகை முடிந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற சென்னை வாசிகள் மீண்டும் தொடர் விடுமுறை முடிந்த சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர். விழுப்புரம் அடுத்த அய்யன் கோவில் பட்டு பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு.
விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏழு இடங்களில் மேம்பாலம் கட்டும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதால் இந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உடன் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. தொடர் விடுமுறை முடிந்த இந்த நேரம் வரை 60,300 வாகனங்களில் பொதுமக்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.