Dindigul | ``இனிமே நாங்களும் ரோட்ல போவோமே’’ முதல்முறையாக போடப்படும் ரோடு.. கிராம மக்கள் மகிழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை வசதி இல்லாமல் இருந்த லி.மலையூர் கிராமத்தில், தற்போது சாலை வசதி கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்ப்பிணி பெண்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கும் கடும் அவதிப்பட்டு வந்த நிலையில், சாலை வசதி கிடைத்துள்ளதால் மக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்