Dental Clinic | பல் சிகிச்சை-பறிபோன 8 உயிர்கள்.. தமிழகத்தையே உலுக்கிய பல் கிளினிக் மீண்டும் திறப்பு
வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட கருவியே மீண்டும் பயன்படுத்தியதால் பல் சிகிச்சைக்கு வந்த 8 பேர் உயிரிழந்தாக புகார் எழுந்தது. இதன்பேரில் கடந்த மே மாதம் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் மருத்துவமனை தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. மருத்துவமனை சுட்டிக்காட்டிய வசதிகளையும் விசாரணை குழு ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்சியரின் அனுமதியின் பேரில் மூடப்பட்ட பல் மருத்துவமனையை சுகாதாரத்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் திறந்துவைத்தனர்.