Raja Raja Cholan | Thanjavur | ராஜராஜ சோழன் சதய விழா - லோகமாதேவியை வழிபட்ட மக்கள்

Update: 2025-11-02 02:58 GMT

தஞ்சாவூரில் நடைபெற்ற ராஜராஜ சோழன் சதய விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் 1040 சதய விழா நடைபெற்றது.சுவாமி திருவீதியுலா, கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதியில் வலம் வந்தது. சதய விழாவை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் இருந்து 60 ஆண்டுக்கு பிறகு மீட்கப்பட்ட ராஜராஜன் லோகமாதேவி சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே வரும் லோகமாதேவி வீதி உலாவை ஆயிரக்கணக்கான மக்கள் வழிப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்