பங்குனி உத்திரம் - தங்க தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்த முருகப்பெருமான்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, முருகப்பெருமான் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருக்கோயில் மலை மீது தங்கத் தேர் உலா வந்த நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வழிபாடு செய்தனர்.