Madurai Food Festival | இன்னைக்கு ஒரு புடி.. வினோத கறி விருந்து திருவிழா - வெளுத்து கட்டிய ஆண்கள்
மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா
மதுரை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா விமரிசையாக நடந்து இருக்கிறது.
மதுரை திருமங்கலம் அருகே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
அனுப்பபட்டி கிராமத்தில் அமைந்துள்ள காவல் தெய்வம் கரும்பாறை முத்தையா கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் இத்திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கம். 2 ஆயிரம் கிலோ அரிசி, 60 கிடாய்கள் வெட்டப்பட்டு, 1000 கிலோ கறி சமைத்து, கறி விருந்து படையல் செய்யப்பட்டது. இதனை ஆண்கள் மட்டுமே சாப்பிட்டனர்.
கறி விருந்து முடிந்தவுடன் இலையை எடுக்க மாட்டார்கள். இலை காய்ந்தபின்னர் ஒரு வாரம் கழித்து பெண்கள் அந்த பகுதிக்கு சாமி கும்பிட வருவார்கள். இந்த விநோத திருவிழாவில் கரடிக்கல், செக்கானூரணி உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள் பங்கேற்றனர்.