Omni bus | Accident | உளுந்தூர்பேட்டையில் திடீரென கவிழ்ந்த ஆம்னி பஸ் கொடூர பலி..
உளுந்தூர்பேட்டை - சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த ஆம்னி பேருந்து
உளுந்தூர்பேட்டை அருகே சேலம் சென்ற ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயணி ஒருவர் உயரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 16 பயணிகளை ஏற்றிக்கொண்டு கரூர் சென்றுகொண்டிருந்தது.இந்தப் பேருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் பகுதியில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.இதில் பேருந்தில் பயணம் செய்த நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த ஜியாவுதீன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து சாலையிலே கிடந்ததால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பேருந்தை மீட்டு, போக்குவரத்தை சரிசெய்தனர்.