6 இளைஞர்களை கம்பி எண்ண வைத்த 300 மாத்திரைகள்
ராணிப்பேட்டையில் முட்புதரில் நின்று கொண்டிருந்த கும்பலிடம் இருந்து தடை செய்யப்பட்ட 300 வலி நிவாரணி மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களும் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும் ,போதைக்காக வலிநிவாரண மாத்திரைகளை பல்வேறு பகுதிக்கு சென்று விற்பனை செய்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டனர்.