காலால் பைக்கின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள் - பரபரப்பு காட்சி
தருமபுரி மாவட்டம் காந்தி நகரில் இரண்டு மர்ம நபர்கள் காலால் பைக்கின் பூட்டை உடைத்து, வண்டியை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தருமபுரி இளைஞர் அணி தலைவர் விக்னேஷ், காலையில் எழுந்து பார்த்த போது, வீட்டின் வெளியே இருந்த அவரது இருசக்கர வாகனத்தை காணாவில்லை. உடனே சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், இருவர் பைக்கை திருடியது தெரிந்து புகாரளித்த நிலையில் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.