Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.01.2026) | 6AM Headlines | ThanthiTV

Update: 2026-01-06 00:48 GMT
  • தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா... சென்னை நந்தம்பாக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது...
  • சென்னை பனையூர்அலுவலகத்தில், தவெக தலைவர் விஜய் முன்னிலையில், மாற்று கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்... புதுச்சேரியை சேர்ந்த எல்.பெரியசாமி உட்பட 5 முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்ததாக தெரிவிக்கபப்ட்டுள்ளது...
  • "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்கிற தலைப்பில் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற உள்ள தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு... வரும்19ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேதி மாற்றப்பட்டு ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
  • திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2வது நாளாக சந்திப்பு... தொகுதி பங்கீடு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது...
  • சம ஊதியம் கோரி சென்னையில் 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களிடம் அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்... தங்களது கோரிக்கைக்கு முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என, இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்