திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச டோக்கன் கவுன்ட்டர்கள் திறக்கப்படவுள்ளன. கீழ் திருப்பதியில் 3 இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கப்படுவது வழக்கம்... இதனிடையே, வைகுண்ட ஏகாதசி காரணமாக கடந்த 29ஆம் தேதி முதல் கவுன்ட்டர்கள் மூடப்பட்டு ஆன்லைன் மற்றும் நேரடியாக வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், திருப்பதியில் உள்ள 3 கவுன்ட்டர்களும் நாளை முதல் திறக்கப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது... டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் நாளை மறுநாள் முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.