புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, இனி 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பொங்கல் திருநாளுக்கு பரிசுத்தொகையும் தனியாக வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஜனவரி 12-ஆம் தேதி முதல் இரண்டும் வழங்கப்படும் எனவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.