Koyembedu | Chennai | Pongal | கோயம்பேட்டுக்கு வரும் ஒட்டுமொத்த தமிழகம் | பொங்கலுக்கு ரெடியாகும் சென்னை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் சிறப்பு சந்தை திறக்கப்பட்டுள்ளது.. 7 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் நேரடியாக தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யும் வகையில் அடிப்படை வசதிகளுடன் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரும்பும், ஈரோடு, சேலம் மற்றும் ஆந்திராவில் இருந்து இஞ்சி, மஞ்சள் கொத்தும் கொண்டு வந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.