Jasmine Flower | உச்சம் தொட்ட மல்லிகை பூ விலை - ஒருகிலோ இத்தனை ஆயிரமா? - அதிர்ச்சியில் மக்கள்
மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.6,400ஆக உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் தொடர்ந்து மல்லிகை பூ விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று மல்லி ஒரு கிலோ 4300 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று மேலும் 2100 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 6400 க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது
கடும் பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு காரணமாக மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
கோடை காலங்களில் ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வரை விளைச்சல் தரும் மல்லி, குளிர்காலத்தில் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை மட்டுமே விளைச்சல் கிடைக்கிறது.
இந்த நிலையில் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதால் சத்தியமங்கலத்தில் மலர் சாகுபடி விவசாயிகளால் நடத்தப்படும் பூ மார்க்கெட்டிற்கு மல்லிகைப்பூ வரத்து வெகுவாக குறைந்தது.
இதன் காரணமாக பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கொண்டு வந்துள்ள பூக்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் கூறினர்.
இதன் காரணமாக நேற்று ஒரு கிலோ மல்லி 4,300 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ 2,100 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 6,300 ரூபாய்க்கு விற்பனையானது.