Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (09.01.2026) | 7 PM Headlines | Thanthi TV

Update: 2026-01-09 13:54 GMT
  •  ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.. படத்திற்கு சென்சார் சான்று பெறும் முன் ரிலீஸ் தேதியை அறிவித்தது ஏன் என்று அவர் படக்குழுவிடம் கேள்வி எழுப்பினார்..
  • பொங்கல் ரிலீஸை காரணம் காட்டி ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்... அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்..
  • ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்பட உரிமையை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.... படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது...
  • திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியர், காவல்துறை ஆணையர் உயநீதிமன்ற மதுரை அமர்வில் ஆஜர்.. சந்தனக்கூடு நிகழ்வின் போது கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரத்தில் கொடி கட்ட அனுமதித்தது எப்படி? என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்... 
  • சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது..... தங்கம் திருட்டு குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத் துறையும் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
Tags:    

மேலும் செய்திகள்