இதுவரை 78 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம்
தமிழகத்தில், இதுவரை 78 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது..
பொங்கல் பண்டிகையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு மூன்றாயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன், பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது... இந்த நிலையில், இதுவரை 78 லட்சத்து 30 ஆயிரத்து 523 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரொக்கமாக இரண்டாயிரத்து 349 கோடி ரூபாய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.