Robbery | Tirupathur | வீடு புகுந்து கொள்ளை.. வடிவேலு பட பாணியில் திருடர்கள் எஸ்கேப்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்த திருடர்கள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடியையும் தூவி சென்றுள்ளனர். நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ஜாவித் என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் 5 சவரன் நகை, 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு மிளகாய் பொடியை தூவி சென்றனர்.