Namakkal | "ரூ.20 கோடி மோசடி செய்த 70 வயது மூதாட்டி" - அதிர்ச்சியில் நாமக்கல்
குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறிய மூதாட்டி-ரூ.20 கோடி மோசடி
நாமக்கல்லில் 70 வயது மூதாட்டி கீர்த்தி பவானி என்பவர் குறைந்த விலைக்கு தங்கம், பாதி விலைக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி தருவதாக கூறி, சுமார் 20 கோடி ரூபாய் மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாக கூறி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்துள்ளார். இதன் மூலம் நற்பெயரை ஈட்டிய மூதாட்டி, பலரிடம் பணத்தை பெற்று தலைமறைவான நிலையில் பாதிக்கப்படவர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.