Dindigul | வேறு வேறு இடத்தில் ஒரே நேரத்தில் சடலமான கணவன், மனைவி - ஈரக்குலையை நடுங்கவிட்ட இரட்டை கொலை

Update: 2026-01-09 10:42 GMT

திண்டுக்கல் அருகே வெவ்வேறு இடங்களில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் சேசுராஜ். இவர் அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் மாயாண்டி ஜோசப் கொலை வழக்கில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் நத்தம் ரோடு பகுதியில் சேசுராஜ் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் அவரை ஆயுதங்களால் வெட்டிப்படுகொலை செய்தது.

அதே நேரத்தில், சேசுராஜின் 2-வது மனைவி தீபிகாவையும் யாகப்பன்பட்டியில் உள்ள வீட்டில் வைத்து வெட்டி மற்றொரு கும்பல் கொலை செய்தது.

இருவேறு இடங்களில் நடைபெற்ற இந்த இரட்டைக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து யாகப்பன்பட்டி ஞானராஜ், தர்மர், அருள், ஜான்பீட்டர் உள்ளிட்ட 8 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்