கடையநல்லூர் அருகே சுந்தரேசபுரத்தை சேர்ந்த காளிராஜ் மனைவி காளிஸ்வரி, தனது ஒரு வயது குழந்தை கிருத்திக்குடன் ஒரு வாரத்திற்கு முன்பாக புளியங்குடியில் இருக்கும் தனது தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டின் வாசலை தெளிப்பதற்காக மோட்டாரை இவர் இயக்கியபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு காளீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.