சேலத்தில் குடும்ப தகராறில் பெட்ரோல் ஊற்றி மனைவி தற்கொலை
சேலம் அருகே குடும்பத்தகராறில் பெட்ரோல் ஊற்றி மனைவி தற்கொலை செய்துகொண்ட செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவதாபுரம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் தனபால்... இவரது மனைவி பிரியா.. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக தம்பதியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பெட்ரோல் ஊற்றி பிரியா தற்கொலைக்கு முயன்றார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற கணவர் தனபால் படுகாயம் அடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன
Next Story
