உடலில் காயங்களுடன் படுத்திருந்த புலி உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே போர்த்தியாடா கிராமத்தில் உடலில் காயங்களுடன் சோர்வடைந்து படுத்திருந்த ஆண் புலி பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த 2ம் தேதி புலியை கண்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்த நிலையில், ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்த வனத்துறையினர், இரண்டு புலிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் அந்த புலிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அசைவின்றி படுத்திருந்த புலி உயிரிழந்ததை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து, உயிரிழந்த புலியை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து தகனம் செய்தனர்.
Next Story
