``போலீஸ் நம்மை விசாரணைக்கு அழைப்பதே மனித உரிமை மீறலா?’’ அதிரடி காட்டிய சென்னை ஐகோர்ட்
TN Police | ``போலீஸ் நம்மை விசாரணைக்கு அழைப்பதே மனித உரிமை மீறலா?’’ அதிரடி காட்டிய சென்னை ஐகோர்ட்
"விசாரணைக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது"
சொத்து விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்து காவல் ஆய்வாளர் மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. மனித உரிமை மீறல் வழக்கில் புளியந்தோப்பு காவல் ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவும் ரத்து. காவல் ஆய்வாளருக்கு ரூ.10,000 அபராதம் விதித்த உத்தரவையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மனித உரிமை மீறல் வழக்கில் ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆய்வாளர் ரவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு