ஈரோடு அருகே நடைபெற்ற ஆணழகன் போட்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். பவானி பகுதியில், தனியார் ஜிம் மற்றும் ஈரோடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில்,50 கிலோ எடை பிரிவு முதல் 94 கிலோ வரை எடை பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று நபர்களுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. போட்டி நிறைவாக 4 வயது சிறுவன் உடல் கட்டமைப்பை மேடையில் வெளிப்படுத்தியது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.